இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முஸோலினி. இவரும் ஹிட்லரும் நண்பர்கள். இரண்டாம் உலகப்போருக்கு அடிகோலியவர்கள்.
இந்த முஸோலினி மாறுவேடத்தில் ரோம் நகரில் ஒரு சினிமாவிற்குச் சென்றார்.
'செய்திச்சுருள்' காட்டப்பட்டபோது முஸோலினி அதில் இருந்தார்.
தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் உடனே எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்.
ஆனால் பார்வையாளர்களிடையே மாறுவேடம் புனைந்து இருந்த முஸோலினி மட்டும் எழுந்திருக்கவில்லை.
அவரது பக்கத்து இருக்கையில் இருந்தவர் முஸோலினியின் தோளில் தட்டிக் கூறினார்:
"ஏ! முட்டாள், நாங்களும் உன்னை மாதிரித்தான் அந்த சர்வாதிகாரியைப் பற்றி நினைக்கிறோம். உனக்கு உயிர் பிழைக்க வேண்டுமென்றால் நீயும் எழுந்து நின்று கையைத் தட்டிக் கோஷம் போடு”