ஓர் ஊரில் செல்வந்தர்கள் வாழும் ஒரு தெருவில் ஏழை ஒருவனும் வசிக்க நேர்ந்தது.
அந்த ஏழை, தெருவில் பிச்சைக்காரர்கள் யாராவது வந்தால், அவர்களை அடித்து விரட்டாமல், செல்வந்தர் வீடுகளைத் தனது ஆள்காட்டி விரலால் அடையாளம் காண்பித்து, அந்தப் பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்து வந்தான்.
அவன் இறந்ததும், அவனுடைய அந்த ஆள்காட்டி விரல் மட்டும் சொர்க்கம் சென்றது. ஆனால், அடுத்தப் பிறவியில் அவன் ஒரு செல்வந்தனாகவேப் பிறந்தான்.
முற்பிறவியில் தனது விரல் சொர்க்கம் சென்றதை நினைவில் வைத்து, அவன் இப்போது சொர்க்கம் செல்வதற்கு ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்தான். அதாவது, அப்போது எந்தப் பிச்சைக்காரர் வந்தாலும் உடம்பைத் தூக்கி எழுந்து நடுத்தெருவில் நின்றுகொண்டு, மற்ற செல்வந்தர்கள் வீடுகளுக்கு அனுப்பினான். ஆனால், அவன் ஒன்றும் தர்மம் செய்யவில்லை.
தன்னுடைய உடல் முழுவதும் சொர்க்கம் செல்லும் என்ற எண்ணத்தில் அவன் அவ்விதம் செய்தான்.
அவன் நினைத்தது போலவே அவன் இறந்ததும் அவனது உடல் முழுவதும் சொர்க்கம் போயிற்று. ஆனால் அடுத்தப் பிறவியில் அவன் வழிகாட்டப்பட வேண்டிய ஒரு பிச்சைக்காரனாகவேப் பிறந்தான்.