அரசன் நுசிர்வான் அரியணையில் அமர்ந்திருந்தான்.
அப்பொழுது தூதுவன் ஒருவன் மகிழ்ச்சிப் பெருக்கோடு அங்கு ஓடி வந்தான்.
“அரசே! நமக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்த நம் எதிரி அழிந்தான். நம்மீது கொண்ட அருளால் இறைவன் அந்த அரக்கனை ஒழித்துவிட்டார். உடனே இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட விழா ஏற்பாடு செய்யுங்கள்" என்றான்.
இதைக் கேட்ட நுசிர்வான் சிந்தனையில் ஆழ்ந்தான்.
தூதனைப் பார்த்து, ''என்னை மட்டும் இறைவன் நிலையாக வைத்திருக்கப் போகிறானா? நம்முடைய உயிர் எப்பொழுதும் ஆபத்தில் இருக்கும் போது, நம் எதிரி இறந்துவிட்டான் என்பதற்காக நாம் மகிழ்ச்சி அடைய முடியுமா?'' என்று கேட்டான்.
தூதன் தலை கவிழ்ந்தான்.