ஒரு சமயம் ஸ்பெயினிலிருந்து ஓர் இளைஞர் பக்கத்து நாட்டுக்குத் தூதுவராக அனுப்பப்பட்டார்.
அந்த நாட்டு அரசர், இளைஞரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்:
"ஸ்பெயின் நாட்டில் மனிதர்களே இல்லை போல் இருக்கிறது! அதனால் தான் ஸ்பானிய மன்னர் தாடி முளைக்காத ஒரு சிறுவனைத் தூதுவராக அனுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன்!" என்று.
உடனே தூதுவராக வந்த இளைஞர் சொன்னார்:
"அரசே! அறிவு என்பது தாடியில் இருப்பதாகத் தாங்கள் கருதுவது, எங்கள் மன்னருக்குத் தெரியாது! தெரிந்திருந்தால், எனக்குப் பதிலாக ஒரு வெள்ளாட்டையே அனுப்பி வைத்திருப்பார்!" என்று போட்டாரே ஒரு போடு.
மன்னன் ஆச்சரியத்தில் மூழ்கி அப்படியே நின்றுவிட்டான்.