மனிதன், பிரம்மாவிடம் சென்று வாழ்வில் முன்னேறவும், சுகமும் சாந்தியும் அருளுமாறும் வரம் வேண்டினான்.
பிரம்மா அவனுக்கு இரண்டு பைகளை அளித்தார். இரண்டும் நிரம்பியிருந்தன.
ஒன்றை முதுகில் கட்டினார்; மற்றதைக் கழுத்தில் தொங்கவிட்டார். மனிதன் வியப்படைந்து அவற்றின் இரகசியம் என்ன?, பயன் என்ன? என்று கேட்டான்.
பிரம்மா கூறினார்:
''முதுகில் உள்ள பையில் உன்னுடைய அண்டை அயலாரின் குறைகள் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றைப் பின்னால்தான் வைத்திருக்க வேண்டும்; பார்க்கவேக் கூடாது. இல்லையென்றால் காரணமின்றியே உனக்கு வேதனை ஏற்படும்; முன்னேற்றத்திற்குத் தேவையானதைச் செய்யாமல் போய், அதனால் வரும் வேதனையில் நீ சிக்கிக்கொள்வாய்.
கழுத்தில் மாட்டப்பட்டுள்ளதில் உன்னுடைய குறைகள் எப்போதும் நிரம்பியுள்ளன. உன்னுடைய கண் முன்பு இவை எப்போதும் இருக்கட்டும். அடிக்கடி பார்த்துக் கொண்டே இரு. அவற்றைக் களைவதற்கு நல்ல முறையில் முயற்சி செய்து வா. இந்த இரண்டு பைகளின் தத்துவத்தை நன்கு அறிந்து கொண்டால், நிச்சயமாக உனக்குச் சுகம், சாந்தி கிட்டும்; முன்னேற வேண்டும் என்ற உன் ஆசையும் நிறைவேறும்”