பேராசைமிக்க ஒருவன் சாகும் போது இறைவனை வேண்டினான். உடனே கடவுள் காட்சி தந்து, “உன் கடைசி ஆசை என்ன?" என்று அவனிடம் கேட்டார்.
“நான் இறந்த பிறகு, போகும் இடத்தில் எனக்கு எப்போதும் சாராயம், மாமிசம், சிகரெட் போன்ற எல்லா போகங்களும் கிடைக்க வேண்டும். அதுதான் எனது ஆசை" என்றான் அவன்.
“அப்படியே ஆகட்டும்" எனக் கூறி கடவுள் மறைந்தார்.
அதேபோல் அவன் இறந்த பிறகும் அவன் விரும்பியதெல்லாம் கிடைத்தன.
சிறிது நாள் தொடர்ந்து அதையெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வேறு எதுவும் வேலையில்லாததால் அவனுக்கு அங்கேயும் போரடித்தது.
வழியில் சென்று கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து எரிச்சலுடன், “என்ன இடம் ஐயா இது? இங்கே வந்ததை விட நரகத்துக்கே போயிருக்கலாம் போலிருக்கிறதே?" என்றான்.
அதற்கு அவர் மெதுவாக அவனிடம், “தம்பி, இப்போது நீ இருக்குமிடம் நரகம்தான்" என்று கூறினார்.