அரண்மனையில் நடந்த ஒரு விருந்தில் பீர்பல் அக்பருக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
அக்பர் பீர்பலைக் கேலி செய்ய விரும்பினார்.
யாருக்கும் தெரியாமல் அவர் தமது தட்டில் இருந்த வாழைப்பழத் தோல்களை பீர்பலின் தட்டில் போட்டு விட்டு, “இன்று பீர்பல் மிகுந்த பசியில் இருக்கிறார் போலிருக்கிறது. அவருடைய தட்டில் சாதாரணமாய் இருப்பதை விட வாழைப்பழத் தோல்கள் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கின்றன" எனக் கூறினார்.
பீர்பலும் சற்றும் சளைத்தவரல்லவே! உடனே அவர், “என்னைவிட அரசருக்குத்தான் அதிகப் பசி என்று நினைக்கிறேன். அரசர் தமது தட்டில் தோலைக்கூட விட்டு வைக்கவில்லையே!" என்று அமைதியாகக் கூறினார்.