மகாவீரரை நான்கு பேர் சேர்ந்து அடித்தார்கள். அடிக்கும் போது ஒன்றும் கூறவில்லை. ஓவென்றும் கூச்சலிடவில்லை. பேசாமல் பொறுத்துக் கொண்டார்.
ஒருவர் கேட்டார், ``சுவாமி, அடிக்கும் போது அவர்களிடம் எதற்காக அடிக்கின்றீர்கள் என்றாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?''
மகாவீரர் கூறினார், ``ஏதாவது காரணம் இருக்க வேண்டும். உள்ளே இருக்கும் கோபத்தை யார் மீதேனும் காட்டியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். கோபத்தைத் தீர்த்துக் கொள்ள நான் அகப்பட்டது நல்லதுதான். வேறு யாரையேனும் அடித்திருந்தார்களேயானால் அவர் திருப்பி அடித்திருப்பார் இல்லையா? அதனால் நான் எதையும் கேட்கவில்லை'' என்றார் மகாவீரர்.