அரண்மனை வாயில் அருகே பெரிய அரச மரம் ஒன்று இருந்தது.
கருவூலத்தில் வைக்க ஒரு பெரிய பெட்டி செய்யப்பட்டது.
அதை அரண்மனைக்குள் கொண்டு செல்ல அந்த மரம் தடையாக இருந்தது.
அரசனிடம் சென்று மரத்தை வெட்டுவதற்கு அனுமதி கேட்டனர்.
விபரத்தை கேட்ட அரசன், "கோட்டையின் ஒரு பக்க மதிலை இடித்துப் பெட்டியைக் கொண்டு வருக” என்றான்.
வீரர்களில் ஒருவன், "மரத்தை எளிதாக வெட்டி விடலாம். கோட்டையின் மதிலை இடித்தால் மீண்டும் கட்ட நிறைய செலவு ஆகும்” என்றான்.
அதற்கு அரசன், "அந்த மரத்தினால் பல பயன்கள் உள்ளன. அதை வெட்டினால் மீண்டும் உருவாக்க இயலாது. ஆனால் சுவரை இடித்தால் மீண்டும் கட்டி விடலாம். அதற்குச் சில நாட்கள் போதும்' என்று விளக்கினான்.
அப்படியேப் பெட்டி கொண்டு வரப்பட்டது.
சில நாட்களில் சுவர் கட்டப்பட்டது.