போலந்து நாட்டுத் துறவியாகிய ஹோபட்ஸ கெய்ம் என்பவரைக் காண வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்திருந்தார்.
தம்முடைய அறைக்குள் வீற்றிருந்த துறவி வந்தவரை வரவேற்றார். அந்த அறைக்குள் சில நூல்கள், ஒரு மேசை, நாற்காலி, படுப்பதற்காக எளிமையான கயிற்றுக் கட்டில் இவ்வளவுதாம் இருந்தன.
இதைக் கண்டு வந்தவர் வியப்படைந்தார். "இந்த அறையில் பொருள்களே இல்லையே? உங்கள் பொருள்கள் எங்கே?'' என்று கேட்டார்.
அதற்குத் துறவியார், ''உங்களிடமும்தான் பொருள்கள் இல்லை '' என்று கூறினார்.
இதைக் கண்டு வந்தவர் வியப்படைந்தார். “நான் இங்கே விருந்தினனாக வந்திருக்கிறேன். கொஞ்ச நேரத்தை கழிக்கப் போகிறேன். இங்கே எனக்கு எதற்குப் பொருட்கள்?" என்று கேட்டார்.
அதற்குத் துறவியார், “அன்பரே! நானும் இந்த உலகில் விருந்தினனாகத்தான் வந்திருக்கிறேன்'' என்று மறுமொழி தந்தார்.