எளிய கவிஞன் அவன். ஏதும் வருமானம் இல்லாமல் வறுமையால் வாடிக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் நள்ளிரவில் திருடன் ஒருவன் அந்தக் கவிஞன் வீட்டில் புகுந்து பீரோவை உடைத்துப் பார்த்தான்.
பீரோவில் கந்தலாடைகளே இருந்தன. கவிஞன் எழுதும் எழுத்து மேஜையைத் திறந்து பணம் காசு ஏதாவது அதில் இருக்குமா என்று திருடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கவிஞன் படுக்கை விளக்கைப் போட்டுக்கொண்டு எழுந்து அமர்ந்து பலமாகச் சிரித்தான்!
திருடனுக்கு ஒன்றும் புரியவில்லை .
“ஏன் சிரிக்கின்றாய்?" என்று திருடன் கேட்க, கவிஞன் பேசினான்:
“சகோதரனே! நான் பகலில் தேடித் தேடிப் பார்த்தும் கிடைக்காத ஒன்றை நீ இரவிலே வந்து தேடுகிறாயே என்றுதான் சிரிக்கிறேன்!" என்றான்.