ஏழை ஒருவன் திருமண வீட்டில் நுழைந்தான்.
கல்யாணச் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. ஆதலால் அவன் மாப்பிள்ளையின் தோழனைப் போல் நடந்து கொண்டான். பெண்வீட்டார் அவனை நன்கு உபசரித்தார்கள்.
பெண் வீட்டாருக்கு வேண்டிய பிரமுகர் போல் அவன் நடந்துகொண்டான்; மாப்பிள்ளை வீட்டாரும் பெரிதாக அவனுக்கு உபசாரம் செய்தார்கள்.
இவ்வாறு இரண்டு வீட்டாரையுமே அவன் ஏமாற்றிக் கொண்டிருந்தான். இரு வீட்டாருக்கும் அவன் மீது சந்தேகம் எழுந்தது.
எனவே அவர்கள் அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். இதையறிந்த அவன் யாருக்கும் தெரியாமல் திருமண வீட்டிலிருந்து ஓடிவிட்டான்.
இவனைப் போன்றதுதான் அகந்தை. தேடினால் அது ஓடிவிடும்! அகந்தையைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும்! அகந்தை அழிவதே முக்தி.