ஒரு காட்டில் துறவி ஒருவர் இருந்தார்.
அவரிடம் ஒருவன் சென்று, ஞானம் பெறுவதற்குத் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டினான்.
அவர் அவனை வேறொரு துறவியிடம் போகுமாறு கூறினார்.
அவரிடம் சென்ற போது அவரும் அவனை மற்றொருவரிடம் அனுப்பி வைத்தார்.
இப்படியே பத்து துறவிகளிடம் சென்ற அவன் அலுத்துப் போய் பொறுமை இழந்து, முதல் துறவியிடம் திரும்பி வந்து கோபமாகச் சத்தம் போட்டான்.
அப்போது முதல் துறவி கூறினார்:
"ஒருவனுக்கு ஞானம் ஏற்பட வேண்டுமானால் முதலில் பொறுமை தேவை. பலர் பலவிதமாகக் கூறுவதைப் பொறுமையாகக் கேட்டு, இறுதியில் தனக்கு எது சரியானது என்பதை அறிவதுதான் ஞானம். நாங்கள் எல்லோருமே ஞானம் பெறுவதற்காகத்தான் தவம் செய்து கொண்டிருக்கிறோம். பிறரிடம் உபதேசம் பெறுவதால் மட்டும் ஞானம் அடைந்து விட முடியாது. ஆகவே, தாங்கள் முதலில் பொறுமையைப் பெற்று பிறகு ஞானம் பெற முயலுங்கள்''