ஒரு சமயம் ஐந்து நண்பர்கள் சேர்ந்து வெளிமனிதர்களைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்களில் ஒருவன் அங்கிருந்து எழுந்து போனான்.
உடனே அவனைப் பற்றி நான்கு பேரும் விமர்சனம் செய்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் மற்றொருவன் எழுந்து போனான்.
அவன் போன உடனேயே மற்ற மூவரும் அவனைப் பற்றிக் கேவலமாக விமர்சனம் செய்தார்கள்.
இன்னும் சிறிது நேரத்தில் மூன்றாவது ஆளும் எழுந்து போனான்.
அவன் போனதும் அவனைப் பற்றி மற்ற இருவரும் பேசி முடித்த பின்பு, மிஞ்சியவர்களில் ஒருவன் மற்றொருவனைப் பார்த்துக் கூறினான்:
''இப்போது நான் இந்த இடத்தை விட்டுப் போகப் போகிறேன். இனி என்னைப் பற்றி இன்னொருவனிடம் பேச நீ ஆள் தேட வேண்டாம். என்னைப்பற்றி என்னிடமே கூறிவிடு''
மற்றொருவன் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
நாலாவது ஆள் எழுந்து போனபிறகு, அவன் முதுகின் பின்புறம் சென்று அழகு காட்டினான் ஐந்தாவது ஆள்!