கையாங் எனும் ஒரு முஸ்லீம் சாது தம் சீடனுடன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்.
அப்போது நமாஸ் செய்யும் வேளை. கீழே துணியை விரித்துப் போட்டு இருவரும் நமாஸ் செய்ய ஆரம்பித்தனர்.
திடீரென்று சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.
சீடன் பயந்து ஓடிப் போய்ப் பக்கத்திலிருந்த ஒரு மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். அப்போதும் அவனது பயம் நீங்கவில்லை.
ஆனால், குருவோ கடவுள் வழிபாட்டிலேயே மூழ்கியிருந்தார்.
அருகில் வந்து நின்ற சிங்கத்தைக்கூட அவர் கவனிக்கவில்லை.
அந்தச் சிங்கம் அவரை ஒன்றும் செய்யாமல் அப்பால் சென்றுவிட்டது.
சிங்கம் சென்றதும் சீடன் கீழே இறங்கி வர, இருவரும் காட்டை விட்டு ஊருக்குள் வந்தனர்.
அப்போது ஒரு கொசு குருவின் மூக்கில் அமர்ந்து கடிக்க அவர் ‘ஆ’ என்று சத்தமிட்டார்.
அதைக் கண்ட சீடன் குருவிடம், ‘‘சிங்கத்தைக்கூடத் திரும்பிப் பாராத தாங்கள் இப்படி ஒரு சிறு கொசுவைப் பார்த்துப் பயப்படலாமா?’’ என்று கேட்டான்.
அதற்கு கையாங், ‘‘சீடனே, நான் அப்போது கடவுளோடு சேர்ந்து இருந்தேன். இப்போது மனிதனோடு அல்லவா சேர்ந்து இருக்கிறேன்’’ என்றார்.
‘‘நண்பரே! இரு சக்கரங்களான வீரம், பொறுமை இல்லாமல் இந்த தர்மரதம் ஓடாது. ஒரு சக்கரமான வீரம் மட்டும் இருந்து பொறுமையில்லை எனில் நீண்டதொரு போரை எதிர்கொள்ள முடியாது. மாறாக, பொறுமையை இழந்தாலோ எவரையும் சந்திக்கவே முடியாது. ரதத்தின் மேல் பறக்கும் கொடியே யாருடைய ரதம் எனக் காட்டிவிடும். தர்மத்தின் கொடிதான் உயரப் பறக்கிறதே! இந்த ரதத்தின் நான்கு குதிரைகள் என்ன தெரியுமா? உடல் வலிமை, விவேகம், தன்னடக்கம் (தமம்), பிறரிடம் பரிவு (பர்ஹித்). பலமும் விவேகமும் ரதத்திற்கு அருகில் உள்ளே உள்ள குதிரைகள். தமம், பர்ஹித் என்ற மற்ற இரு குதிரைகள் வெளியே உள்ளவை. விபீஷணா! நமது பலமும், விவேகமும் பிறரது நலனுக்காகவே அல்லவா பயன்பட வேண்டும். இந்தத் தர்ம ரதத்தை ஓட்டுபவன் கையிலுள்ள கடிவாளங்கள் மன்னிப்பு, கருணை மற்றும் பிறருக்கு நன்மை செய்தல். யாருக்கு எதிராகப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது திறமை உள்ளது. மேலும் இந்த ரதத்தைச் செலுத்துபவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் தெரியுமா? மனதை எப்போதும் இறைவனிடம் வைத்தவனால்தான் இந்த தர்ம ரதத்தைச் செலுத்த முடியும். எனக்குக் கவசம் இல்லையென்றா கவலைப்படுகிறீர்கள்? எனக்கு எதற்கு கவசம்? வைராக்கியம்தான் நமது கவசம். தன் புலன்களை வென்றவனை எந்த ஆயுதத்தால் வீழ்த்த முடியும்? ஆயுதங்களைச் செலுத்தும் சக்தியும் விஞ்ஞானமன்றோ! நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்’’ என்றார்.
விபீஷணன் வியந்தான்.