இளம் பெண்மணி ஒருத்தி தன குழந்தையுடன் கடற்கரைக்குப் போயிருந்தாள்.
கடல் அலைகளிலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு அலை திடீரென இழுத்துச் சென்று விட்டது.
''ஐயையோ,என் குழந்தை போய்விட்டதே,''என்று அந்தப் பெண் கண்ணீர் விட்டு அழுதாள்.
அந்தப் பண்ணின் அழுகை உருக்கமானதாக இருந்ததால், கடல் தெய்வம் குழந்தையை மீண்டும் உயிருடன் கரைக்கு அனுப்பியது.
தன் குழந்தைக்கு ஏதும் ஆகாதது கண்டு மகிழ்ச்சியில் அவள் திக்குமுக்காடி விட்டாள்.
குழந்தையின் கன்னங்களில் மாறிமாறி முத்தமிட்டவள், எதேச்சையாகக் குழந்தையின் காலைக் கவனித்தாள்.
குழந்தையின் ஒரு காலில் தான் செருப்பிருந்தது. இன்னொரு காலில் இருந்த செருப்பைக் காணவில்லை.
உடனே அந்தப் பெண்ணின் மகிழ்ச்சி பறந்து விட்டது.''ஐயையோ, செருப்பு போய்விட்டதே,''என்று அவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
இப்படித்தான் பல சமயங்களில் முக்கியம் இல்லாத சமாச்சாரங்கள் நம் மகிழ்ச்சியைப் பறித்து விடுகின்றன.
எதிலும் திருப்தி அடையாதவர்களுக்கு மகிழ்ச்சி ஏது?