பயனற்ற வேலையைச் செய்யலாமா?
கடற்கரையில் நின்றுகொண்டிருந்த ஒரு ஞானி அலைகளால் தள்ளப்பட்டு கரையில் தத்தளித்த மீன்களை எடுத்து கடலுக்குள் விட்டுக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த ஓர் இளைஞன், “ஐயா, இவ்வளவு பெரிய கடலின் கரை எங்கும் இப்படி மீன்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும், எல்லாவற்றையும் உங்களால் காப்பாற்ற முடியுமா? ஏன் இப்படி பயனற்ற வேலையைச் செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
கரையில் தத்தளித்த மீனைக் கையில் எடுத்த ஞானி, ”என் செயல் இந்த ஒரு மீனுக்கு உதவுவதாக இருந்தாலும் கூட, அது பயனுடையதுதான்” என்று சொன்னபடியே அதனை நீரில் விட்டார்.
மற்றவர் நலனுக்காகச் செய்யப்படும் எதுவும் பயனுள்ள செயலே என்பதை உணர்ந்தான் அவன்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.