முல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட அவரிடம், “புயல் வருமானால் என்ன செய்வீர் ?என்று நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேள்வியைக் கேட்டார்.
அவர், “நங்கூரத்தை நாட்டுவேன் “என்று சொன்னார்.
“முன்பை விடப் பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது, அப்போது நீர் என்ன செய்வீர்?” என்று நேர்காணல் கண்டவர் கேட்க,
“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “என்றார் அவர்.
இப்படி அது சென்று கொண்டு இருந்தது.
“பத்தாவது புயல் !”
நஸ்ருதின் சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்“
நேர்காணல் நடத்தியவர், ”ஆனால், இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர்?”என்று கேட்டார்.
அதற்கு நஸ்ருதின், ”தாங்கள் எங்கிருந்து இத்தனைப் புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான் நானும் நங்கூரத்தைப் பெறுவேன்“ என்று சொன்னார்.