ஒரு எறும்பும், ஒரு பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன.
வேறொன்றுமில்லை, யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையைத் தொடுவது என்பது தான் அவைகளுக்கிடையிலான பந்தயம்.
அந்தப் பறவை எறும்பைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டு மலையை நோக்கிப் பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே அந்தப் பறவை மலையின் உச்சியைத் தொட்டது.
மலையுச்சிக்குச் சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பைத் தேடியது. அப்போது, அந்த எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து சிறிது தூரத்தைக் கூடத் தொடவில்லை.
உடனே அந்தப் பறவை எறும்பைப் பார்த்து, எனக்கு முதலிலேயே தெரியும், இதில் வெற்றி எனக்குதான் என்று, பறக்கும் சக்தி கொண்ட பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா?” என்று அந்த எறும்பைப் பார்த்துக் கேலியும் செய்து சிரித்தது.
நீண்ட நாட்கள் கழித்து எறும்பின் விடாமுற்சியால், அந்த எறும்பு அந்த மலையின் உச்சியைச் சென்றடைந்தது.
அப்போது அந்தப் பக்கமாக மலையைக் கடந்து சென்ற பறவை, மலைய்ச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாகப் பார்த்தது.
அப்போது அந்தப் பறவையை பார்த்து எறும்பு, “வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்து விடுகிறது. சிலருக்குத் தாமதமாகக் கிடைக்கிறது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், எல்லோருக்கும் வெற்றி ஒரு நாள் கிடைத்து விடும்” என்றது.
என்ன எறும்பு சொல்றது சரிதானே...?