ஒர் செல்வந்தனுக்கு திடீர் மரணம் வரும் என்று அவனது ஜோசியன் சொல்லிவிட்டான். அவன் நாலு பக்கமும் ஒரு பெரிய சுவர் கட்டி, சுற்றிலும் பாதுகாப்புக்கு ஆட்களை போட்டிருந்தான். ஒரு சுவற்றில் இரண்டே இரண்டு ஜன்னல்களை மட்டும் வைத்திருந்தான். யாருமே உள்ளே வரமுடியாது.
அந்த வழியே சென்ற ஒரு பிச்சைக்காரன் அதைப் பார்த்துச் சிரித்தான்.
ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த செல்வந்தனுக்கு கோபம் வந்தது. "ஏன் சிரிக்கிறாய்" என்று கோபமுடன் கேட்டான்.
"நீங்கள் இரண்டு ஜன்னல்கள் ஏன் வைத்திருக்கிறீர்கள்?"
அரசன், "ஜன்னல்கள் இல்லையென்றால் நான் புழுக்கத்தினால் செத்துவிட மாட்டேனா?" என்றான் கோபத்துடன்.
பிச்சைக்காரன் அமைதியாகச் சொன்னான்:
"இப்போது மட்டும் என்ன? தினம் தினம் பயத்தால் செத்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்" என்று.