ஒரு குரு தன் சீடர்களை நோக்கி, “நாம் கோபப்படும் போது மிக சத்தமாக பேசுகிறோம்? ஏனென்று தெரியுமா?” என்று கேட்டார்.
சீடர்கள் ஒவ்வொருவரும் பல விதமான பதில்களை கூறினார்கள்.
ஆனால் அந்தப் பதில்கள் எதுவும் குருவிற்குத் திருப்தி அளிக்கவில்லை.
கடைசியில் அவரே, “இருவர் கோபமாக இருக்கும் போது அவர்களின் மனங்கள் தூரமாகின்றன. அதனால் தான் சத்தமாகப் பேசுகிறோம்” என்றார்.
மேலும் அவர் தொடர்ந்து, “இருவர் நெருக்கமாக இருக்கும் போது அவர்கள் மனங்களுக்கு இடையில் உள்ள தூரம் குறைவதால் மிக மெதுவாகப் பேசிக்கொள்கிறார்கள். அவர்களின் நெருக்கம் மேலும் அதிகரிக்கும் போது பேச்சேத் தேவை இல்லாமல் போகிறது” என்று விளக்கினார்.
சீடர்களுக்குப் புரிந்தது.