ஒரு விவசாயி சில நாய்க்குட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தார்.
அதை விளம்பரம் செய்வதற்காக ஒரு பலகையில் சாயம் பூசி, விவரத்தை எழுதி, தனது முற்றத்தில் ஆணி அடித்துக் கொண்டிருந்தார்.
வேலையை முடிக்கும் சமயம், ஒரு சிறுவன் சட்டையை வந்து இழுத்தான். யார் என்று பார்க்கும் பொழுது, “நான் உங்களிடமிருந்து ஒரு நாய்க்குட்டி வாங்கிக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டான்.
சரி, ஆனால் நல்ல இனத்தைச் சேர்ந்த நாய்க்குட்டி என்பதனால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்குமே என விவசாயி பதிலளித்தார்.
உடனே அச்சிறுவன் தலை குனிந்தவாறு, சட்டைப் பையிலிருந்து சில்லறைக் காசுகளை எடுத்தான். பிறகு, விவசாயியிடம், “நான் நாய்க்குட்டிகளைப் பார்ப்பதற்கு மட்டும் இந்த காசுகள் போதுமானதா?” எனக் கேட்டான்.
“கட்டாயமாக” என பதில் வந்தது.
சிறிது நேரதில் நாய் வீட்டிலிருந்து நான்கு அழகான நாய்க்குட்டிகள் ஓடி வந்தன. அந்தச் சிறுவனுக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம்.
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இன்னொரு நாய்க்குட்டி நடக்க முடியாமல் கொஞ்சம் மெதுவாக வந்து கொண்டிருந்தது.
“எனக்கு இந்த நாய்க்குட்டி தான் வேண்டும்” என்று கேட்டான்.
விவசாயி ஆச்சரியத்துடன், “இந்த நாய்க்குட்டியால் வேகமாக ஓட முடியாது. மற்றவை போல் விளையாடவும் முடியாது” எனச் சொன்னார்.
அச்சிறுவன் காற்சட்டையை நகர்த்தி ஊன்றுகோல் போல காலில் இரும்பு வளையம் காலணியுடன் இணைந்திருப்பதைக் காண்பித்தான்.
எனக்கும் வேகமாக நடக்க முடியாது. என்னை புரிந்து கொள்ளும்படி யாராவது வேண்டும் என்று கூறினான்.