ஒரு நாள் ராமு தான் வளர்த்து வந்த சிங்கத்தை அழைத்துக் கொண்டு காட்டுப்பகுதிக்குத் தேன் எடுப்பதற்காகச் சென்று கொண்டிருந்தான்.
செல்லும் வழியில், தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப் பற்றிச் சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர்.
அப்போது செல்லும் வழியில், ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழேத் தள்ளி, அதன் மீது நிற்பதைப்போன்ற ஒரு சிலை இருந்தது.
''அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இந்தச் சிலையிலேயேத் தெரிகிறது'' என்றான் ராமு.
''ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்தச் சிலையைச் செய்திருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்'' என்று சொல்லியது அந்தச் சிங்கம்.
உண்மைதானே...!