கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான்.
விசம், தூக்குக்கயிறு, துப்பாக்கி, கத்தி போன்றவைகளைத் தற்கொலைக்குப் பயன்படுத்துவது என முடிவு செய்த அவன் அங்கிருந்த மேசையில் கொண்டு வந்து வைத்தான்.
அந்த நான்கில் எதைப் பயன்படுத்தித் தற்கொலை செய்து கொள்வது என்று அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டது. அவன் அதை வெறித்துப் பார்த்தபடி இருந்தான்.
அப்போதுஅங்கிருந்த அவள் மகள், ‘அப்பா, நாம் தற்கொலை செய்து கொள்வதற்கு இத்தனை வழி இருக்கும் போது, நாம் இந்த உலகில் வாழ்வதற்கு ஒரு வழி கூடவா இல்லை?” என்று கேட்டாள்.
மகளின் கேள்வி அவனுக்கு வாழ்வதற்குப் புதிய வழியைக் காட்டியது போன்றிருந்தது.