ஒரு நரி கிணறு ஒன்றில் தவறி வீழ்ந்து விட்டது. மேலே வர முடியாமல் தவித்தது.
அந்தப் பகக்மாக வந்த ஆடு ஒன்று, கிணற்றுக்குள் ஏதோ சப்தம் கேட்பதைக் கேட்டு, கிணற்றை எட்டிப் பார்த்தது.
அதனுள், நரி இருப்பதைப் பார்த்து விட்டு, “நரியாரே! கிணற்றினுள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டது.
ஆடு இப்படிக் கேட்டதும், அந்த நரி, "இந்த கிணற்று நீர் இளநீர் போன்று மிகவும் சுவையானது. எனக்குத் தாகம் எடுக்கும் போதெல்லாம், இக்கிணற்றினுள் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வேன்" என்று பொய் சொன்னது.
ஆட்டிற்கும், உடனே அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
உடனே, அதுவும் கிணற்றினுள் குதித்தது.
நல்ல சமயத்தை எதிர்ப்பார்த்திருந்த நரி, அந்த ஆட்டின் கொம்புகளைப் பிடித்து, அதன் மீது ஏறி வெளியேக் குதித்து தப்பி ஓடியது.
அப்போதுதான் அந்த ஆடு, நரியின் தந்திரத்தை உணர்ந்தது.
இப்போது கிணற்றினுள் இருந்து தன்னால் வெளியே வர முடியாது என்று நினைத்த ஆடு, "யாராவது என்னக் காப்பாற்றுங்கள்" என்று கதற ஆரம்பித்தது.
நாம் யாருக்கு உதவி செய்தாலும், அந்த உதவிக்கு அந்த நபர் தகுதியானவர்தானா? என யோசித்துச் செய்ய வேண்டும்.