அமெரிக்காவில் ராபர்ட் என்பவர், பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார்.
“இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பாக விளங்கக் கூடிய பேனாவும், மையும் இல்லாமல் நீங்கள் அற்புதமாக எழுதலாம். விவரம் அறிய ஒரு டாலர் அனுப்புங்கள்” என்று அந்த விளம்பரத்தில் தெரிவித்திருந்தார்.
அந்த விளம்பர வாசகத்தைப் பார்த்த நிறைய பேர் பணம் அனுப்பி வைத்தனர்.
அதற்கு ராபர்ட் சொன்ன பதில்:
“புத்திசாலிகளே... பென்சிலை வைத்து எழுதுங்கள். ராபர்ட் உங்களை ஏமாற்றவில்லை. நீங்கள் கொஞ்சம் நிதானமாக யோசிக்காமல் பணம் அனுப்பியவர்கள்தான். ஏமாந்தவர்கள் எதையும் யோசித்துச் செயல்படுங்கள்”