ஒரு ஊரில் மாபெரும் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தினமும் அவரிடம் பலர் அறிவுரை கேட்க வருவதுண்டு.
சமீப காலமாக, அந்த ஊரில் அடிக்கடி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போனதால், அதன் காரணம் என்ன? என்று மக்கள் ஞானியிடம் கேட்டனர்.
அகந்தை அதிகமாவதால், செல்வம் அதிகமாகச் சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி, அவர்களுக்கு எளியமுறையில் விளக்கம் கொடுக்க எண்ணினார்.
“எல்லாச் செயலுக்கும் “நானே” காரணம் என்றார்.
‘நான்’ என்ற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என பொருள்பட ஞானி கூறினாலும், மக்கள் அறியாமையில் இருந்ததால் திருட்டு அனைத்துக்கும் தான் மட்டுமே காரணம் எனக் கூறுவதாக எண்ணி அவரை அடித்து கொன்றனர்.
அறியாமையிலிருப்பவர்களுக்குச் சொல்லும் அறிவுரை, அவர்கள் புரிந்து கொள்வதிலேயே இருக்கிறது.