ஒருமுறை அறிஞர் ஒருவர் "இயற்கைப் படைப்புகள் அனைத்தும் ஒன்றே" என்ற மெய்மை விளக்கம் தந்து கொண்டிருந்தார்.
அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு படித்த மேதை “பகுத்தறிவு கொண்ட ஒரு மனிதன் கடற் பூதங்களையும்; புலிகளையும் அடக்கியாள முடியுமா? நாமெல்லாம் ஒன்று என்பதால் ஒருவன் புலியின் மீது சவாரி செய்ய முடியுமா?" என்று கேட்டான்.
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அன்கிருந்த ஒருவர் பலமாகச் சிரித்தார்.
“புலியின் முதுகில் மேலேறிச் செல்வது, இரண்டு உடல்களுக்கிடையே வேறுபாடு உண்டு என்பதைக் காட்டுகிறது. ஆனால் ஒரு மனிதன் புலியால் விழுங்கப்பட்டுவிட்டால் அவர்கள் இருவரும் ஒன்றே" என்றார்.
அதனைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.