மகான் ஒருவருக்கு திடீரென உடல் நலம் ஒத்துழைக்காமல் போனது. இருந்தாலும் விடாமல் ஏழை மக்களுக்கு உதவும் பணியைச் செய்து கொண்டேயிருந்தார்.
அதைக் கண்டு மனம் வருந்திய சீடர்கள் “குருவே உங்களுக்குத்தான் உடல் நலம் சரியில்லாமல் உள்ளதே இந்நிலையில் மக்கள் சேவை அவசியமா?”என்று கேட்டனர்.
அமைதியான மகான் சொன்னார் “ஒரு விளக்கை ஏற்றி வைத்தால், அதன் கடமை அந்த இடத்திற்கு ஒளி தருவதுதான். அந்த ஒளி பிறருக்கு எப்படிப் பயன் தருகிறது என்பதைப் பற்றி, அந்த விளக்கிற்குச் சிறிதும் கவலை இல்லை. எண்ணெயும் திரியும் எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவ்வளவு காலம் அது ஒளி வீசிவிட்டுப் பின் தானாகவே அணைந்துவிடும். அப்படித்தான் பிறருக்கு உதவும் பணியும்... அதை இறுதிவரை செய்வதுதான் பிறவிக்கடமை”