மனைவிக்கு அழகான கூந்தல்.... அதை அழகாக வாரி முடிய ஒரு சீப்பு வாங்கக் கூட வழியில்லாத அளவுக்கு வறுமை.
இந்நிலையில், ஒரு நாள் தன் கணவனிடம் ஒரு சீப்பு வாங்கித் தருமாறு கேட்கிறாள்.
"நானே என் தாத்தா எனக்குத் தந்த கைக் கடிகாரத்திற்கு வார் போடுவதற்குக் கூடப் பணமில்லாமல், அதைச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டுடிருக்கிறேன்... சீப்பு வாங்கப் பணமில்லை" என்கிறான்.
கடைவீதியில் திரியும் போது, அவன் மனம் குறுகுறுக்கத் தன் கைக்கடிகாரத்தை விற்று ஒரு சீப்பு வாங்கினான்.
மனைவி சந்தோஷப்படுவாள் என்று சீப்புடன் வீட்டிற்கு வந்தவனுக்கு அதிர்ச்சி.
மனைவி முடியை வெட்டி பாப் செய்திருக்கிறாள்.
தன் அழகான முடியை விற்று அவன் கைக்கடிகாரத்திற்கு ஒரு வெள்ளி வார் வாங்கி இருந்தாள் மனைவி.