அந்தப் பெண்மணிக்கு வீட்டில் போரடித்தது. ஏதாவது செல்லப்பிராணியை வளர்க்கலாம் என்று ஆசை. ஆனால் கணவன் எதிர்த்தான்.
ஒரு தடவை அவன் ஆபீஸ் வேலையாக சில நாட்கள் வெளியூர் போயிருந்தபோது, அவள் ஒரு குரங்கை வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கி விட்டாள்.
வீட்டுக்குத் திரும்பிய கணவன், குரங்கைப் பார்த்துக் கோபமடைந்தான்.
இதற்கு என்ன சாப்பாடு கொடுத்து வளர்ப்பாய்? என்று கோபத்துடன் கத்தினான்.
மனைவி அமைதியாகச் சொன்னாள்:
“நாம் சாப்பிடும் அதேச் சாப்பாட்டை அதுவும் சாப்பிடும்”
“இந்த சனியன் எங்கே தூங்கும்?”
“நாம் படுக்கும் அதே படுக்கையில் ஒரு மூலையில்...”
“நாற்றம் சகிக்காதே”
மனைவி நிதானமாக பதில் சொன்னாள்.
“கவலைப்படாதீர்கள்! இருபது வருடங்களாக நானே உங்கள் நாற்றத்தை தாங்கிக் கொண்டிருக்கும் போது, இந்த குட்டிக் குரங்கா சமாளித்துக் கொள்ளாது?”
நம் குறைகளைக் கண்டு கொள்ளாமல், பிறர் குறைகளையேப் பெரிதாக நினைக்கிறோம்.