ஒரு வேட்டை நாய் கிராமத்தைக் காவல் காத்து வந்தது.
ஒரு நாள் அது தன குட்டியுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த சில தெரு நாய்கள், வேட்டை நாய்களைப் பார்த்துக் குரைத்தன.
வேட்டை நாயோ அதனைக் கருத்தில் கொள்ளாது, தன் வழியே சென்று கொண்டிருந்தது.
குட்டி நாய், தாயிடம், “அவை குரைப்பதைக் கேட்டுவிட்டு, ஒன்றும் செய்யாது வருகிறாயே? அந்த நாய்களைக் கடித்துக் குதற வேண்டாமா?”
அதற்கு, வேட்டை நாய் பதில் சொன்னது.
“அப்படிச் செய்யக் கூடாது. தெரு நாய்கள் இருப்பதால்தான் வேட்டை நாய்களான நமக்கு உயர்ந்த மதிப்பு இருக்கிறது. எனவே அவற்றை ஒன்றும் செய்யக்கூடாது”