மகிழ்ச்சி வாலில் இருக்கிறது.
ஒரு நாய் தன் வாலைக் கடிக்க முயற்சி செய்து முடியாமல் தன்னைத்தானே சுற்றி சுற்றி வந்தது.
என்ன முயற்சி செய்து அதனால் வாலைக் கடிக்க முடியவில்லை.
இதை நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு நாய் அதனிடம் வந்து விளக்கம் கேட்டது.
முதல் நாய் சொன்னது,
“ஒரு பெரிய மகானைப் பார்த்தேன். அவர், என் மகிழ்ச்சி என் வாலில் இருப்பதாகக் கூறினார். அதனால்தான் வாலைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்”
அதற்கு இரண்டாவது நாய், “அன்பு நண்பனே, நானும் அந்த மகானைப் பார்த்தபோது, என்னிடமும் அவர் இதையேத்தான் சொன்னார். நானும் முயற்சி செய்து பார்த்துவிட்டு முடியாமல் சோர்வடைந்து போனேன். ஆனால் அதற்குப்பின் அதைப் பற்றிக் கவலைப்படாமல் என்னுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன். ஆனால் நான் எங்கே போனாலும் என் வாலும் பின்னாலேயே வருகிறது. அதாவது மகான் சொன்ன என் வாலிலுள்ள மகிழ்ச்சி என் பின்னாலேயே வருகிறது''
div align=right>
நாம் மகிழ்ச்சியைத் தேடிப்போனால் கிடைக்காது. நாம் நம் கடமைகளைச் சரிவர செய்து வந்தால் போதும். மகிழ்ச்சி தானே நம் பின்னால் வரும்.