முகம்மது நபி அவர்கள் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே சென்ற ஒரு யூத வீரன் அவரை அடையாளம் கண்டு அவர் மீது இருந்த வெறுப்பினால் அவரைக் கொன்று விட முடிவு செய்து, வாளை உருவிக்கொண்டு அவர் அருகில் சென்றான்.
சப்தம் கேட்டு விழித்தார் நபிகள்.
அந்த யூதன், “முகம்மதுவே, இப்போது யார் உன்னைக் காப்பாற்றுவார்கள்?” என்று அவரிடம் கேட்டான்.
நபிகள், “இறைவன் தான் என்னைக் காப்பான்” என்று உரக்கக் கூறினார்.
அந்தக் குரல் தந்த அதிர்ச்சியில் யூதன் கையிலிருந்து வாள் நழுவியது.
நபிகள் உடனே அந்த வாளை எடுத்துக் கொண்டு அவனிடம் கேட்டார், “இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்கள்?”
அவன், “என்னைக் காப்பாற்ற யாருமே இல்லை”என்று கதறினான்.
நபிகள் புன்முறுவலுடன் அவனிடன் சொன்னார், “இல்லை நண்பரே, உம்மையும் அந்த இறைவன் தான் காப்பாற்றுவான்'' என்றபடி அந்த வாளை அவனிடமே திரும்பக் கொடுத்தார்.
அந்த வீரன் தன செயல் குறித்து வெட்கித் தலை குனிந்தான்.