வயது முதிர்ந்த விவசாயி ஒருவன் இருந்தான்.
வாழ்வில் என்ன பின்னடைவுகள் ஏற்பட்ட போதிலும் எப்போதும் மகிழ்வுடன் காணப்பட்டான்.
ஒரு நாள் அவனுடைய நண்பன் கேட்டான், “இவ்வளவு துன்பங்களுக்குப் பின்பும் தைரியமாக இருக்கிறாயே, அது எப்படி முடிகிறது?”
சிரித்துக்கொண்டே விவசாயி சொன்னான், “அது ஒன்றும் கஷ்டமில்லை. தவிர்க்க முடியாததுடன் எப்படி சமரசம் செய்து கொள்வது என்று தெரிந்து கொண்டால் போதும்”
இயற்கை உன்னை நோக்கிக் கோடாரியை வீசும் போது, உனக்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன.
ஒன்று, கோடரியின் கைப்பிடியைப் பிடிப்பது; மற்றொண்டு கோடரியின் கூர் முனையைப் பிடிப்பது. பறந்து வரும் கோடரியின் கைப்பிடியைப் பிடித்து அதை நமக்குப் பயன் தரும் வகையில் உபயோகப்படுத்திக் கொள்வது தான் தைரியம்.