ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.
அவன் கட்டளைக்கு அடிபணியச் சில திருடர்கள் இருந்தனர். ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.
ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு, தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.
ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.
அங்கே கிடந்தது மூன்று பெரிய கற்களைத் தூக்கிக்கொண்டு அவர் பின்னே வரச்சொல்லிப் பணித்தார்.
அவர் மலை ஏறத் துவங்கி விட்டார்.
திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை.
அதை ஞானியிடன் அவன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டுவிட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.
சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன் நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூற ஞானியும் இன்னொரு கல்லைக் கீழே போட்டுவிட்டு, ஒரு கல்லை மட்டும் எடுத்து வரச் சொன்னார்.
மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள்.
ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை.
அதைக் கண்ட ஞானியும் ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான்.
மலை உச்சியை அடைந்தவுடன் ஞானி சொன்னார்:
''நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கிக் கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அதுபோல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது''