நல்ல நூல்களை வாசித்தக் கண்கள்
கலங்கரை விளக்கமாய்த் திகழும்!
*****
கொத்தும் கோழிக்குப் புல்லெது முளைப்பெது
என்று தெரியப் போவதில்லை!
*****
இனிப்பு என்றாலும் இலையின் ஓரத்தில்
வைக்கப் படுவதே மரபு!
*****
இறக்கை முற்றாமல் பறக்கத் துணியும்
குஞ்சுகள் ஆபத்தை உணரா!
*****
அன்பு இல்லாச் சொற்கள் விதை
இல்லாக் கனி போன்றது!
*****
வாழும்போது வராதக் கண்ணீர்த் துளிகள்
இறந்தபோது வந்து ஒப்பேத்தும்!
*****
வாழை வடக்கே குலை தள்ளினாலும்
யோகம் மட்டும் திருடனுக்கே!
*****
காற்றாடியின் உயரத்தை தீர்மானிப்பது காற்றல்ல
கையில் இருக்கும் நூல்!
*****
குருவியின் கால் பட்டதற்கு மரக்கிளை
என்றுமே கோபப் பட்டதில்லை!
*****
ரூபாய் நோட்டின் நிறத்திற்கு ஏற்பவும்
நிறம் மாறுகின்றன பச்சோந்திகள்!