சூடிய மலரைச் சுற்றிவந்து ரீங்காரமிடும்
வழக்கம் வண்டினத்தில் இல்லை!
*****
பால்மரமே ஆனாலும் அளவுக்கு அதிகமாகக்
கீறினால் பட்டுப் போகும்!
*****
மூளையைப் பற்றி கவலைப்படாத மனம்
முடியைப் பற்றி கவலைப்படுகிறது!
*****
கருவாச்சி அழும்போது துடிக்காத இதயம்
வெள்ளச்சி அழும்போது துடிக்கின்றது!
*****
மண்புழுவின் வயிற்றுக்குள் தூண்டில் மறைந்து
இருக்குமென்று மீனுக்குத் தெரியாது !
*****
*****
இறக்கை முற்றிய குஞ்சுகளைக் கூட்டில்
வைத்துக் கொள்வதில்லை குருவி!
*****
குருவிகள் கூடுகட்ட வங்கிக் கடனை
நம்பி இருப்பது இல்லை!
*****
கடன் வாங்கி கல்யாண வீட்டிற்கு
மொய் வைப்பதன்று நல்லாட்சி!
*****
மதுவால் அமைவ தன்று அரசு
மக்களால் அமைவதே அரசு!
*****
காதல் செய்யும் மனமே கடவுள்
உறையும் அன்பு இல்லம்!