* மனங்கள் விலகிச் செல்லும்போது முகங்கள்
சிரிப்பு மொய் வைக்கின்றன!
*****
* முகத்தைக் காட்டும் கண்ணாடிகள் மனதை
முலாம் பூசி மறைக்கின்றன!
*****
* பயிரை மேய்ந்த வேலி அகற்றப்பட்டதால்
இனி பயிர்களுக்குப் பாதுகாப்பு!
*****
* பேச வேண்டிய இடத்தில் மௌனமாக
இருப்பதும் குற்றத்தின் குணமே!
*****
* உயிருக்கு ஆபத்து என்பதை அறியாமல்
காலைக் கடிக்கும் எறும்புகள்!
*****
* காற்று வீசும்போது ஆடும் காற்றாடி
* வீசாதபோது மரத்தில் மாட்டிக்கொள்கிறது!
*****
* தூண்டிலில் கோர்க்கப்பட்ட புழுவின் வலியினை
மீன்கள் ஒருபோதும் அறிவதில்லை!
*****
* வண்ணப் பட்டாம் பூச்சிகளுக்காகச் சிலந்திகள்
அமைதியாக வலை விரிக்கின்றன!
*****
* முதலைகள் முகநூலில்கூட பதுங்கி இருக்கலாம்
சிந்தித்துப் பகிர்தல் வேண்டும்!
*****
* நல்ல புத்தகங்கள் எண்ணங்ளை உயர்த்தும்
ஏணிப் படிகளாகத் திகழும்!