மனதின் குரல் - 4
முனைவர் கு. சிதம்பரம்
ஆலமரமே ஆனாலும் தாங்கிப் பிடிக்க
சில விழுதுகள் தேவைப்படுகின்றன!
*****
பரமபதம் விளையாட்டில் ஏணிகள் ஏற்றிவிட்டாலும்
பாம்புகள் விழுங்கத்தான் செய்கின்றன!
*****
பராசக்தி அவதாரம் எடுக்கும் போது
தீயசக்திகள் அழிந்து போகும்!
*****
கைத் தட்டுபவர்கள் தட்டிக்கொண்டே இருந்தால்
பேசுபவர்கள் யோசிக்கவே மாட்டார்கள்!
*****
புகழ்ச்சியை நேசித்துப் பழகிய காதுகள்
உண்மையை வெறுக்கத் தொடங்குகின்றன!
*****
கோட்டான் உட்கார்ந்த தேங்காய் எவர்க்கும்
பயன் இல்லாமல் போகும்!
*****
நெல் வயல் எலிபோல துறைதோறும்
வளைத் தோண்டும் துறைமார்கள்!
*****
சான்றோராயினும் பொருந்தாச் சூழலில் வாழும்போது
சிறப்பை இழக்க நேரிடும்!
*****
வேப்பங்காய் தங்க நிறத்தில் பழுத்தாலும்
மதிப்பு என்னவோ கொட்டைக்குதான்!
*****
வாசமில்லா மலர்கள் இருக்கலாம் தேனில்லா
மலர்கள் இல்லை இவ்வுலகில்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.