மனதின் குரல் - 5
முனைவர் கு. சிதம்பரம்
ஐம்புலன்கள் வழி ஒருவர் உண்ணும்
உணவே எண்ணங்களைத் தீர்மானிக்கின்றது!
*****
குறை சொல்லும் வாயின் உள்ளே
குப்பைகள் நிறைந்து இருக்கும்!
*****
வாடகை வாய்களில் விஷம் சுரக்கும்
தங்கப் பற்கள் கட்டப்பட்டிருக்கும்!
*****
கிசுகிசுப்பதும் குறை கூறுவதும் நிற்கும்போது
ஊர் உறங்கி விடுகிறது!
*****
உலக அழகிகளைவிட உலகமகாப் பொய்கள்
அதிக கவர்ச்சி உடையது!
*****
மது விற்றப் பணம் மாற்றத்தை
ஏற்படுத்தாது மக்கள் வாழ்வில்!
*****
மதுவிற்றக் காசில் வாங்கிய மெத்தை
தூக்கத்தைத் தராமல் போகாது!
*****
பணத்திற்குக் கிடையாது சமூகநீதி அது
அனைத்துப் பாவங்களையும் அரங்கேற்றும்!
*****
பாவம் செய்யாதப் பாவக்காயும் கோபப்படாதக்
கோவக்காயும்கூட இங்கு அறுபடுகின்றன!
*****
மீனின் பசியினைத் தனக்குச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொள்கிறது தூண்டில்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.