மனதின் குரல் - 6
முனைவர் கு. சிதம்பரம்
முடிக்குச் சாயம் பூசும் விரல்கள்
மூளையைச் சீண்டுவது இல்லை!
*****
கொடிய ஓநாய்கள் சிரித்துக் கொண்டே
வேட்டையாடும் பழக்கம் கொண்டது!
*****
கெட்டுப்போகிறது உறவு துணிக் காயப்பட்டக்
கம்பிகளில் சொட்டும் நீர்த்துளிகளால்!
*****
நிழல் தரும் மரத்தை வெட்டும்
கோடாரிகள் வெயிலில் கருகும்!
*****
காற்று வீசிய போதெல்லாம் தூற்றிக்கொண்ட
முறம் மாசும் தூசுமாய்!
*****
சேவல் கூவி விடிந்த பொழுது
நாய் குரைத்து மறையாது!
*****
ஈசல் பறக்கும் காலமே பறவைகள்
திருவிழா கொண்டாடும் காலம்!
*****
உன் வீட்டுச் சாவி திருடர்கள்
கையில் இருப்பது சமூகநீதியாகா!
*****
சந்நியாசி யார் திருடன் யாரென்று
தீண்டும் பாம்புகள் யோசிப்பதில்லை!
*****
அகராதி போன்றது காதல் என்றுமே
முழுமையாக வாசிக்கபடுவது இல்லை!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.