மனதின் குரல் - 8
முனைவர் கு. சிதம்பரம்
மரத்தின் நிழலில் முளைக்கும் விதைகள்
செழித்து வளர்ந்து கிளைக்கா!
*****
பண்பாட்டில் விஷத்தைக் கக்கும் கரப்பான்களை
அடையாளம் காண்பர் சான்றோர்!
*****
கல்வி ஒருவரை ஏணியிலும் அரசியல்
மின்தூக்கியிலும் ஏற்றி உயர்த்தும்!
*****
பின் வாசல் பிதாமகன்களின் பிதற்றல்களைச்
சான்றோர் புறம் தள்ளுவர்!
*****
அவ்வளவு எளிதில் பாலை மறக்கா
வாய்ச் சுடுபட்ட பூனைகள்!
*****
தனிமனிதப் பொருளாதாரத்தை உயர்த்தாதக் கல்வி
வாசமில்லா மலரைப் போன்றது!
*****
கரடிகளின் ஆட்டம் முடியும் போது
காளைகள் ஆட்டத்தைத் தொடங்கும்!
*****
செங்காந்தள் விரல்கள் தீண்டும் பொழுது
பிணியுடலும் பொழிவு பெறும்!
*****
தேனின் சுவைக்குக் காரணம் இதழோடு
இதழ் வைத்து எடுப்பதால்தானோ!!
*****
தேர்வு என்பது வினாத்தாள்களை விற்பதற்கன்று
தகுதியானவர்களை அடையாளம் காண்பதற்காக!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.