மனதின் குரல் - 9
முனைவர் கு. சிதம்பரம்
மது போதை வீட்டையும் அதிகாரப்
போதை நாட்டையும் கெடுக்கும்!
*****
தேய்த்துக் கழுவினாலும் நீங்காத கறை
சோப்புப் போட்டவர்களின் கைகளிலும்!
*****
சமூக ஊடகத்தில் நிகழ்காலத்தையும் மூழ்கடித்து
எதிர்காலத்தைத் தொலைப்பதன்று வாழ்க்கை!
*****
குரைக்கும் நாயை அதட்டாமல் சென்றால்
அது துரத்திக் கடிக்கும்!
*****
பொய்மைகள் வலிமை பெறும்போது மக்கள்
கடவுளாக அவதாரம் எடுக்கின்றனர்!
*****
இருட்டை விரும்பி வாழும் ஆந்தைகள்
விடியல் விடியலென்று அலறுமாம்!
*****
தங்கத்தை உரசிப் பார்பதைப்போல பணக்காரனை
உரசிப் பார்ப்பதில்லை வங்கிகள்!
*****
நாய்கள் குரைப்பதால் ஓடும் இரயில்
நிற்கப் போவது இல்லை!
*****
பழத்தை நோக்கி எறியப்படும் கற்கள்
காய்களையும் சேர்த்தே சேதாரப்படுத்துகின்றன!
*****
தென்னை தெற்கே குலை தள்ளினாலும்
தண்ணீர் ஊற்றியவனுக்கு ஒன்றுமில்லை!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.