அறியாமையப் பற்றி அறிஞர்கள்

அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது.
- இங்கர்சால்.

அறியாமையின் குழந்தையே பொல்லாங்கு
- யாரோ.

ஒரே நன்மை அறிவு; ஒரே தீமை அறியாமை.
- சாக்ரடீஸ்.

நமது அறிவு அனைத்தும் நம்மை நம்முடைய அறியாமைக்கு அருகில் கொண்டு செல்கிறது.
- டி.எஸ். எலியட்.

அறியாமையிலிருந்து அச்சம் பிறக்கிறது.
- எமர்சன்.

அறியாமையைப் போல் பெரு விரயம் ஒன்றுமில்லை. அறிவைப் போல் மலிவானதும் ஒன்றுமில்லை.
- அஸ்டோஷ் முகர்ஜி.

ஒவ்வொருவரும் வேறுபட்ட துறைகளில் அறிவற்றவர்களே.
- வில் ரோகர்ஸ்.

குறுகிய மனம் விரிவான அறிக்கை வெளிவிடும்.
- பி.எப்.குக்.

அறியாமனி மனதின் இரவு. அந்த இரவில் நிலவுமில்லை, நட்சத்திரமுமில்லை.
- கன்பூசியஸ்.

வாழ்க்கையின் முக்கிய அங்கம் அறியாமை. நமக்கு எல்லாமே தெரிந்து விட்டால் ஒரு மணி நேரம் கூடத் தாக்குப்பிடித்து வாழ முடியாது.
- டிரான்ஸ் அனட்டோலி.

நிம்மதியான அறியாமையிலிருந்து நிரந்தரமான நாம் செய்யும் முயற்சிகளெல்லாம் இறுதியில் நமக்குத் துக்கத்தையே உருவாக்கித் தருகின்றன.
- ரூஸோ.

அறியாமையிலிருந்து வசதிகள் பெருகுகின்றன. அறிவாளிகள் அதிர்ஷ்டமில்லாதவர்கள்.
- மாத்யூ பிரியர்.

நமது அறிவு பெருகப் பெருக நமது அறியாமையின் அளவும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
- ஜே.எப். கென்னடி.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.