சிரிப்பு பற்றி சில அறிஞர்கள்
சிரிப்பு எனும் சூரியன் மனித இனத்தின் குளிர்காலத்தை விரட்டியடிக்கிறது.
- யாரோ.
சிரிப்பு - அனைத்து மொழிகளிலும் ஒன்றுதான்.
- ஆர்தர் லாங்.
பலத்த சிரிப்பு, காலியான மனத்தின் பேச்சு.
- ஆலிவர் கோல்ட்ஸ்மித்.
வழிபாட்டை விட எப்போதும் இனியதாகவும், சிரித்த முகத்துடனும் இருந்தால் அது கடவுளுக்கு மிக அருகில் கொண்டு போய்ச் சேர்க்கும்.
- விவேகானந்தர்.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது சிரிப்பு ஒன்றே.
- ஜோசப் அடியன்.
மனிதன் எதைக் கண்டு சிரிக்கிறானோ அதைப் போல் அவனது பண்புகளை எடுத்துக் காட்டுவது வேறெதுவுமில்லை.
- கத்தே.
எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள். யாருமே மற்றவர்களின் துன்பங்களைக் கேட்க விரும்பமாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்கே வண்டி நிறையத் துன்பங்கள் இருக்கின்றன.
- யாரோ.
உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருப்பவனைப் போல சிரிக்கும் துணிச்சல் உள்ளவனும் உலகின் எஜமானன்.
- கிளாகோமா லியோபார்டி.
மகிழ்ச்சி அடையும் முன் ஒருவன் சிரிக்க வேண்டும். அல்லது சிரிக்காமலே இறந்து விடலாம்.
- ஜீன் டி லா புருவாரி.
அழாத இள வயதினர் காட்டுமிராண்டி; சிரிக்காத முதியவர் முட்டாள்.
- ஜார்ஜ் சான் டயானா.
சிரிப்பு ஒரு ஊட்டச்சத்து. கவலையைத் தணிப்பது. வலி நிவாரணி.
- சார்லி சாப்ளின்.
குழந்தையின் சிரிப்பை வெறுப்பவனிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
- கே.கே.லாவேட்டர்.
துன்பங்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் சிரிப்புக்குத்தான் உள்ளதே தவிர பெரு மூச்சிற்கல்ல.
- யாரோ.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.