சந்தேகம் வரும் வழி!
சந்தேகத்தைப் போல் விரைவாக வளரும் விச விருட்சம் வேறெதுவுமில்லை.
- காண்டேகர்.
விசாரணைக்குக் கதவுகள் மூடப்பட்டால் சந்தேகம் சன்னல் வழியாக வரும்.
- பெஞ்சமின் ஜோவெட்.
சந்தேகம் எனும் புண்ணை விவாதங்களினாலும், விளக்கங்களினாலும் குணப்படுத்த முடியாது.
- மகாத்மா காந்தி.
நமது சந்தேகங்கள் பகைவர்கள். முயற்சி செய்யப் பயப்படுவதினால் நிச்சயம் வெற்றி பெறுவதில் கூட தோல்வி அடைகிறோம்.
- சேக்ஸ்பியர்.
சந்தேகமே கண்டுபிடிப்புகளின் தந்தை.
- கலிலியோ.
சந்தேகத்தின் தாய் அறியாமை.
- வில்லியம் ஆஎ. ஆல்ஜெர்.
நமக்குக் குறைவாகத் தெரிந்திருக்கும் போது அதிகமாகச் சந்தேகப்படுகிறோம்.
- ஹென்றி லீவர் ஷடி.
சந்தேகம் ஒழுக்கத்தின் நண்பனல்ல. ஆனால், எப்போதும் மகிழ்ச்சியின் விரோதி.
- யாரோ.
எங்கு சந்தேகம் இருக்கிறதோ, அங்கு உண்மையும் உள்ளது. உண்மையின் நிழல் அது.
- கேமலியல் பெயில்வி.
உங்களது தவறில்லாமலிருக்கலாம்; ஆனால், சந்தேகத்திற்குரியது.
- ரிச்சர்ட் வாட்லி.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.