மனிதனை மனிதனாக்குபவை எவை?

காதல் மயக்கத்தில் தோன்றினால் மங்கும். அன்பில் தோன்றினால் பொங்கும்.
- கண்ணதாசன்.

பணம், ஆற்றல், திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய பொருள்களே அன்றி அவையே வாழ்க்கை ஆகாது.
- ஜேம்ஸ் ஆலன்.

எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது நாம் செய்யும் செயல்களையும் எண்ணும் எண்ணங்களையும் பொருத்தது.
- விவேகானந்தர்.

பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது. மனதின் ஈரமும் வேண்டும்.
- காண்டேகர்.

நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது மற்றவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைத்தான்.
- எமர்சன்.

காதல் அடி மேல் அடி வைத்து மெதுவாக வருகிறது. போகும் போது கதவைப் பலமாகச் சாத்திவிட்டுப் போகிறது.
- லெம்ப்கே.

ஆத்திரத்தில் சக்தி குறையும்; பொறுமையில் சக்தி கூடும். உங்கள் சக்தியைச் சேகரித்துக் கொள்ளுங்கள்.
- இயேசுநாதர்.

வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் என்பது சந்தர்ப்பத்திற்காகக் காத்திருத்தலும், வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதுமே ஆகும்.
- வால்டேர்.

அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாகவே நம்மை வந்து சேரும்.
- மகாவீரர்.

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
- மாத்பூன்.

விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிடுகிறான்.
- ரூஸ்வெல்ட்.

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.
- சாக்ரடீஸ்.
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.