- ஹெச். டபிள்யூ. பீச்சர்.

உண்மை எப்போதும் வெற்றி பெறும். பொய்க்கு ஒரு துணை தேவை.
- எபிக்டெட்டஸ்.

உண்மையைப் புறக்கணிப்பதால், அவை இல்லை என்றாகி விடாது.
- ஆல்டஸ் ஹக்ஸ்லி.

உண்மையை விட உயர்ந்த மதம் எதுவுமில்லை.
- யாரோ.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்.ஆனால், எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது.
- சுவாமி விவேகானந்தர்.

உண்மை புனிதமானது; இனிமையானது. தீமையிலிருந்து உங்களை விடுவிக்கிறது. உண்மையைத் தவிர உங்களைக் காப்பாற்றக் கூடியது இந்த உலகில் வேறெதுவுமில்லை.
- புத்தர்.

உண்மை தன் காலணியை அணியும் முன் பொய் உலகைச் சுற்றி வந்துவிடும்.
- சி.ஹெச். ஸ்பர்ஜியன்.

உண்மையும் நற்செயலுமே எல்லாவற்றிலும் ஊடுருவி ஆட்சி செலுத்துகிறது.
- கியார்டினோ புருனோ.

உண்மையையும் நேர்மையையும் சமுதாயத்தில் நடுவில் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர குகைகளிலல்ல.
- மகாத்மா காந்தி.

உண்மை என்பது மனிதனில் இருக்கும் இறைவனின் விருப்பமும் நோக்கமுமாகும்.
- கலீல் கிப்ரான்.

உண்மை பொய் பேசுவதனால் மட்டும் மீறப்படுவதில்லை. மௌனத்தினாலும் அவமதிக்கப்படுகிறது.
- ஹென்றி பிரடெரிக் அமெயில்.

வெறியுணர்வு இருக்குமிடத்தில் உண்மை குடியிருக்காது.
- யாரோ.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.