பணத்தின் அருமை எப்போது தெரியும்?
பணத்தின் அருமையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் யாரிடமாவது கடன் கேட்டுப் பாருங்கள்.
- பெஞ்சமின் பிராங்க்லின்.
பணத்தில் செல்வமில்லை. அது உன் மனதில்தான் இருக்கிறது.
- நபிகள் நாயகம்.
பணம் தரை காணமுடியாத ஆழ்கடல். அதில் கௌரவம், மனசாட்சி, உண்மை ஆகிய அனைத்தும் மூழ்கிப் போய்விடும்.
- கோஸ்லே.
பணம் நல்ல வேலைக்காரன்; மோசமான எஜமானன்.
- டி. பவர்ஸ்.
உன் நம்பிக்கையைப் பணத்தின் மேல் வைக்காதே. பணத்தை நம்பிக்கையான இடத்தில் வை.
- ஹோல்ம்ஸ்.
உங்களிடம் பணமிருந்தால் உலகத்தின் கண்களுக்குப் பாம்பாகத் தெரிவீர்கள். பணமில்லாவிட்டால் நீங்கள் புழுவாகத் தோற்றமளிப்பீர்கள்.
- யாரோ.
பணம் என்பது கை அல்லது கால் போன்றது. அதைப் பயன்படுத்து அல்லது இழந்துவிடு.
- ஹென்ரி போர்டு.
பணத்தைத் தவிர வேறெதுவும் தேனை விட இனிப்பாக இருக்காது.
- பெஞ்சமின் பிராங்க்லின்.
பணம் உரம் போன்றது. பரவலாகத் தூவாவிட்டால் பயன் எதுவும் கிடையாது.
- பிரான்சிஸ் பேகன்.
பணப் பற்றாக்குறை அனைத்துத் தீமைகளுக்கும் வேர்.
- ஜார்ஜ் பெர்னார்ட்ஷா.
தொகுப்பு:- தேனி.பொன். கணேஷ்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.